மேலும் செய்திகள்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
29-Nov-2024
கடலுார்: கடலுாரில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன் முன்னிலை வகித்தார். இணை பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். இதில், கடலுார் தென்பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆறு கரைகளை உயர்த்தி, இருபுறமும் வெள்ள தடுப்பு சுவர் கட்ட வேண்டும். வீடு மற்றும் உடைமைகள் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நிர்வாகிகள் ரவி, சுப்புராயன், குரு ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Nov-2024