மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...விழுப்புரம்
30-Apr-2025
நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பம் அருகே பைக் மீது, மற்றொரு பைக் மோதியதில் ஒருவர் இறந்தார்.கோயம்புத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பரமணியன், 65; காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவர் கடலுார் அடுத்த குணமங்கலத்தில் உள்ள அண்ணன் வைத்திலிங்கத்தின் வீட்டிற்கு வந்திருந்தார்.சுப்பரமணியன் கடந்த 13 ம் தேதி பைக்கில் கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காராமணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் போது, பின்னால் வந்த பைக் சுப்பரமணியன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பரமணியனை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனண. அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பரமணியன் இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.
30-Apr-2025