உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

பரங்கிப்பேட்டை :பணி ஓய்வு பெற்ற பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலருக்கு பணி ஓய்வு பாாட்டு விழா நடந்தது.பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி பணி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு, பு.முட்லுாரில் நடந்த பணி ஓய்வு பாாட்டு விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் காயத்ரி முன்னிலை வகித்தார்.முழுக்குத்துறை பள்ளி தலைமை ஆசிரியர் சமரசம் வரவேற்றார். ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் கந்தசாமிக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நினைவுப்பரிசு வழங்கினர்.விழாவில், குமராட்சி வட்டார கல்வி அலுவலர் ராமதாஸ், ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் ராஜசேகரன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பட்டதாரி ஆசிரியர் விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை