புரட்சி பாரதம் கட்சி தர்ணா
கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில், புரட்சி பாரதம் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறுகையில், சிதம்பரம் தாலுகா, பரங்கிப்பேட்டை அடுத்த உத்தமசோழமங்கலம் ஊராட்சி செயலாளர் பொதுமக்கள் பயன்படுத்திய இலவச கழிவறை மற்றும் ரேஷன் கடையை இடித்து, அதில் இருந்த பொருட்களை தன் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துசென்றுள்ளார்.தட்டிக்கேட்கும் பொதுமக்களிடம், அரசு சலுகைகளை வாங்கி தரமாட்டேன் என மிரட்டுகிறார். எனவே, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.போலீசார் சமாதானம் செய்ததையடுத்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.