உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் சாகுபடி ஆய்வு

நெல் சாகுபடி ஆய்வு

கடலுார்: நெல் சாகுபடியை வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். குமராட்சி வட்டாரத்தில் 25,500 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, 25 முதல் 35 நாட்கள் கடந்துள்ளன. இதனை வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல் ஆய்வு செய்தார். அப்போது அவர், 'அதிக அளவில் டி.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் மேலுரமிடுவதால் பூச்சி நோய் தாக்குதலுக்கு வழி வகுக்கும். தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் பாக்டீரியா இலை கருகல் நோய் சில இடங்களில் தென்படுவதால் நெற்பயிர் இலைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்கிலின் ஹைட்ரோகுளொரைட் (90:10 எஸ்.பி) 20 கிராம் கலவையுடன் காப்பர் ஆக்சி குளோரைடு 200 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பேட்டரி ஸ்பியர்ஸ் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்,' என, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !