உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவுநீர் தேங்குவதால் நோய் பாதிப்பு அபாயம்

கழிவுநீர் தேங்குவதால் நோய் பாதிப்பு அபாயம்

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழை நீரை அகற்ற உள்ளாட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். வடிகால் சாக்கடைகளை முறையாக துார் வாரி மழைநீர் வழித்தோட வழி வகை செய்ய வேண்டும். மேலும் வீடுகளில் அருகே சுற்றியுள்ள பிளாஸ்டிக் கழிவு, தேங்காய் சிருட்டை, காலி தொட்டி, டயர் போன்றவற்றை அகற்றவும், டெங்குகொசுகள் வளர்வதை தவிர்க்க வேண்டும். சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை