மேலும் செய்திகள்
கால்நடை மருந்தகம் சேதம்
27-Dec-2024
கடலுார்: கடலுார் அடுத்த வி.காட்டுப்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் அடுத்த வி.காட்டுப்பாளையம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு கடந்த 2018ம் ஆண்டு ரூ.31.50லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்படடது. கட்டி முடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 10.15மணிக்கு வெள்ளக்கரை, வி.காட்டுப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும், திறக்கப் படாததால் கட்டடம் பழுதடைந்து வீணாகிறது. கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என தெரிவித்தனர். மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தினர். இதையேற்று பொதுமக்கள் 10.30மணிக்கு சாலைமறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
27-Dec-2024