மேலும் செய்திகள்
ஆபத்தான மரம் அகற்றம்
08-Oct-2025
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சுடுகாடு செல்லும் சாலையில் இருந்து புதர்கள் 'தினமலர்' செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுடுகாட்டு பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் சாலை உள்ளது. மேலும், சி.என்.பாளையம் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இந்த வழியாக தான் எடுத்து செல்ல வேண்டும். இந்த சாலை புதர்மண்டி காணப்பட்டதால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, சாலையோரம் இருந்த புதர்கள் வெட்டி அகற்றப்பட்டது.
08-Oct-2025