| ADDED : அக் 16, 2024 07:05 AM
சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலைய கட்டட மேற்கூறையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயமடைந்தார். பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சிதம்பரம், பஸ் நிலைய கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. அந்த வகையில் நேற்று சேலம் பஸ் நிற்கும் பகுதியில், நடைபாதை பகுதி மேற்கூரையின் சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணி ஒருவரின் தலை மற்றும் அருகில் உள்ள கடையின் பொருட்களில் மீது விழுந்தது. அப்போது, அருகில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சிமெண்ட் காரை விழுந்ததில் தலையில் காயமடைந்த நபரை, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதிஷ்டவசமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லாததால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.