உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூரை வீடு எரிந்து சேதம் போலீஸ் விசாரணை

கூரை வீடு எரிந்து சேதம் போலீஸ் விசாரணை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,47; இவர் கூரை வீடு கட்டி அதன் மேல் தகடு போட்டுள்ளார். கடந்த 11 ம்தேதி இரவு 11:30 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி தனது மகளுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கூரை மர்மமான முறையில் தீப்பிடித்தது. உடன் கிருஷ்ணமூர்த்தியும்,அவரது மகளும் கூச்சலிடவே அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. கிருஷ்ணமூர்த்தி புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை