உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழில் முனைவோருக்கு ரூ.31.03 கோடி கடனுதவி

தொழில் முனைவோருக்கு ரூ.31.03 கோடி கடனுதவி

கடலுார் : மாவட்ட தொழில் மையம் மூலம், 601 தொழில் முனைவோருக்கு, 31.03 கோடி ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டதாக, மைய பொதுமேலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.கடலுார் மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை, தொழில் மைய பொதுமேலாளர் விஜயகுமார் கோண்டூர், செம்மண்டலம் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழக அரசால், 2023-24 நிதியாண்டில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோர்களாக மாற்றி பொருளாதார நிலையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 601 பயனாளிகளுக்கு 31.03 கோடி ரூபாய் கடன் தொகை வழங்கப்பட்டது. இதில், 13.78 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை