உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் ரூ.3.21 லட்சம் அபேஸ் ஓடும் பஸ்சில் துணிகரம்

பெண்ணிடம் ரூ.3.21 லட்சம் அபேஸ் ஓடும் பஸ்சில் துணிகரம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பஸ்சில் பெண் பயணியிடம் 3.21 லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சாத்தமங்கலம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி மனைவி லீமா மேரி, 49. இவர் நேற்று காலை தனது கணவர் மற்றும் மகள் நந்தினி ஆகியோருடன் நகை எடுப்பதற்காக 3 லட்சத்து 21 ஆயிரம் பணத்தை பையில் வைத்துக்கொண்டு, ஊரில் இருந்து அரசு டவுன் பஸ் ஏறி சிதம்பரத்திற்கு வந்தனர்.பஸ் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனை அருகே வந்தபோது, லீமா மேரி, அந்தோணிசாமி, நந்தினி ஆகியோர் பஸ்சை விட்டு இறங்கி சிதம்பரத்தில் உள்ள நகை கடைக்கு செல்வதற்காக லீமாமேரி பையை திறந்து பார்த்த போது அதில், இருந்த மொத்த பணத்தையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த லீமாமேரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை