மேலும் செய்திகள்
திருச்செந்துாரில் மீண்டும் தங்கத் தேர் புறப்பாடு
31-Oct-2024
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையை சேர்ந்த சகோதரர்கள் கொளஞ்சி, 48; தங்கதுரை, 41; இருவரும் விவசாயி. தங்கதுரை அதே பகுதியில் வீட்டுமனை வாங்க, நேற்று பகல் 1:30 மணியளவில் முருகன்குடி மற்றும் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள வங்கிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, பைக்கில் பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகம் வந்தார். கொளஞ்சியும் உடன் வந்தார். பணத்தை பைக் பெட்டியில் வைத்துவிட்டு, பத்திரம் எழுத, எழுத்தர் அலுவலகத்திற்கு சென்றனர். எழுத்து வேலை முடிந்து வந்து பார்த்தபோது, பைக் பெட்டி திறந்த நிலையில் பணம் காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில், கொளஞ்சி, தங்கதுரை இருவரும் பணம் எடுத்து வருவதை கண்காணித்து, பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் பெட்டியை மாற்று சாவி கொண்டு திறந்து திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.தங்கதுரை கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
31-Oct-2024