ரூ.6 லட்சம் திருட்டு; சிதம்பரத்தில் துணிகரம்
சிதம்பரம்; சிதம்பரத்தில் பட்டப்பகலில், வண்டி பெட்டியை உடைத்து 6 லட்சத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் தமிழன்பன், 60: ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் மதியம் 3:30 மணிக்கு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வங்கியில் 6 லட்சம் ரூபாய் ரொக்க எடுத்துக் கொண்டு, மொபட்டின் சீட்டு அடியில் உள்ள பெட்டியில் வைத்தார்.படித்துறை இறக்கம் அருகே மளிகை கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வண்டி பெட்டி திறந்தபோது 6 லட்சம் ரூபாய் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.