உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எடச்சித்துார் பள்ளியில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு

எடச்சித்துார் பள்ளியில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு

விருத்தாசலம்; எடசித்துார் பள்ளியில், 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்ட சிறப்பு வகுப்புகளை ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா திடீர் ஆய்வு செய்தார். மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டத்தின் கீழ் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. இதனை விருத்தாசலம் ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மாணர்களின் கற்றல் அடைவுத்திறன் குறித்து கேட்டறிந்து, பாராட்டினார். மேலும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களை பாராட்டினார். முன்னதாக, ஆசிரியர்கள், அலுவலர்கள் விபரம் குறித்த வருகைப் பதிவேடு, கோப்புகளை பார்வையிட்டார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் நாராயணமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் அக்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ