உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆளுங்கட்சி அதிருப்தி: ஓட்டுகளை வளைக்க அ.தி.மு.க., பிளான்

 ஆளுங்கட்சி அதிருப்தி: ஓட்டுகளை வளைக்க அ.தி.மு.க., பிளான்

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் ந டக்க உள்ளது. இதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரசார பயணம் என, தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றன.இதே போன்று, பா.ம.க., தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, எந்த கட்சியை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சி மீது அதிருப்தி உள்ள மக்களின் விவரங்களை சேகரிக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., வினர் கூறுகையில், ' அரசின் உதவித் தொகை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் கடந்த கால அ.திமு.க., ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓட்டுகளை பெற திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி