உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெடிலம் ஆற்றில் தடுப்பணை சட்டசபையில் சபா ராஜேந்திரன் கோரிக்கை

கெடிலம் ஆற்றில் தடுப்பணை சட்டசபையில் சபா ராஜேந்திரன் கோரிக்கை

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் அவர் பேசியதாவது: என்.எல்.சி., விரிவாக்க பணியால், நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட, திருவாமூர் ஊராட்சி, காமாட்சிப்பேட்டையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. குடிநீரும் உவர் தன்மையாக மாறி வருகிறது. இதனை தடுக்க அப்பகுதியில் கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், எனது இலாக்காவில் தடுப்பணை கோரிக்கைதான் அதிகமாக உள்ளது.ஆனால் வருகிற நிதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் கட்ட முடிகிறது. அதனால்தான் நிதி அமைச்சர் தென்னரசுவை துணைக்கு அழைக்கிறேன்.இதுகுறித்து முதல்வரிடமும் கூறியிருக்கிறேன். ஒரு காலத்தில் அணை கட்ட வேண்டும் என்பார்கள் இப்போது தடுப்பணை கோரிக்கைதான் அதிகரித்துள்ளது, சபாராஜேந்திரன் கோரிக்கை குறித்து முதல்வரிடம் தனியாக பேசுகிறேன் என பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி