செந்துார் கார்டன் மனைப்பிரிவில் விற்பனை துவக்கம்
கடலுார்: புதுவண்டிப்பாளையம் செந்துார் கார்டன் மனைப்பிரிவு விற்பனை துவக்க விழா நடந்தது. செந்துார் குரூப்ஸ் நிர்வாகத்தினர், புதுவை மாநிலம், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் தரமான நிலங்ளை வாங்கி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சிறப்பான முறையில் குடியிருப்பு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். செந்துார் குரூப்ஸின் நோக்கம், வீட்டுமனை இல்லாத ஏழை, நடுத்தர மக்களும் புதிய வீட்டுமனைகளை வாங்கிப்பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு நகரங்களில் மனைப்பிரிவுகளை உருவாக்கி சேவை செய்கின்றனர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரபல கடைகள், நிறுவனங்களுக்கு அருகில் மனைப்பிரிவை உருவாக்கி பொதுமக்களுக்கு சிறந்த இடத்தை விற்கின்றனர். செந்துார் குரூப்ஸ் நிர்வாகத்தினர், 15 வருடங்களுக்கும் மேலாக நில வணிகத்தில் அனுபவம் உள்ள நிறுவனம். தற்போது கடலுார் புதுவண்டிப்பாளையம், சூர சம்ஹார வீதியில் பிரசித்த பெற்ற முருகர் கோவில் அருகில் செந்துார் கார்டனை உருவாக்கி, நேற்று முதல் விற்பனையை துவங்கியது. முதல்நாளிலேயே மனைப்பிரிவு விறுவிறுப்பாக விற்பனையாகியது. இந்த மனைப்பிரிவு குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பள்ளி, கோவில், வட்டார போக்குவரத்து அலுவலகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்ற அனைத்து வசதிகள் நிறைந்த பகுதியில் உள்ளது.