மணல் திருடியவர் கைது
வேப்பூர், : டிராக்டரில் மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை நல்லுார்-மேமாத்துார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேமாத்துார் அணைக்கட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அவ்வழியே வந்த டிராக்டர் டிப்பரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.இதில், மேமாத்துார் மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக டிராக்டர் டிரைவர் விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன் மகன் ஸ்டாலின்,20; என்பவரை போலீசார் கைது செய்தனர்.