உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறி

கல்லுாரி விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறி

கடலுார் தேவனாம்பட்டினத்தில், அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு கடலுார், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வெளியூர் மாணவ மாணவியர் தங்கி படிக்கும் வகையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்லுாரி எதிரில் விடுதிகள் உள்ளது. இங்குள்ள மாணவியர் விடுதியில், நுாறு பேர் தங்கி படித்து வருகின்றனர்.இவர்களை கண்காணிக்கும் பணியில் ஒரு வார்டன் உள்ளார். ஆனால், கல்லுாரியில் கடந்த ஓராண்டாக துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அவ்வப்போது, வெளியில் இருந்து ஆட்கள் வரவழைத்து சுத்தம் செய்து வருகின்றனர். இதனால், விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விடுதிக்கு, துாய்மை பணியாளர் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ