உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மை பணியாளர் தற்கொலை

துாய்மை பணியாளர் தற்கொலை

கடலுார்: குறிஞ்சிப்பாடியில், வயிற்று வலியால் பேரூராட்சி துாய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் அன்பழகன், 39; குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த மாதம் 23ம் தேதி, பூச்சிமருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ