செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில், பங்குனி மாத சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி, செல்வ விநாயருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் ஏப்ரல் 1ம் தேதி 10ம் ஆண்டு பால்குட திருவிழா நடக்கிறது.