உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி செயலர்களுக்கு  மரக்கன்று வளர்ப்பு பயிற்சி 

ஊராட்சி செயலர்களுக்கு  மரக்கன்று வளர்ப்பு பயிற்சி 

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி ஒன்றிய, ஊராட்சி செயலர்களுக்கு, மரக்கன்றுகள் உற்பத்தி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் மரம் வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் எனவும், ஒவ்வொறு ஊராட்சியிலும் மரம் உற்பத்தி செய்ய நர்சரி அமைத்து மரம் நட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.அதனை தொடர்ந்து கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில், குமராட்சி பி.டி.ஓ., சரவணன் தலைமையில், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகராஜ், நிவேதா, ராஜலட்சுமி , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரசிவம், செல்வமுத்துக்குமார், 57 ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 70 பேர், குள்ளஞ்சாவடி அடுத்துள்ள சின்னகாட்டுசாகையில், அமைந்துள்ள ஈஷா யோகா மரக்கன்று உற்பத்தி மையத்தில், ஒரு நாள் பயிற்சி பெற்றனர்.இதில், மரம் உற்பத்தி, விதை பாதுகாத்து, மரமாக் குவது எப்படி, மரக்கன்று கள் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மர உற்பத்தி மையத்தை சேர்ந்த, பிரகாஷ் என்பவர் பயிற்சி அளித்தார். தொடர்ந்து அந்தந்த ஊராட்சிகளில் சிறிய அளவிலான நர்சரிகளை உருவாக்கி, மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, ஊராட்சி பகுதி முழவதும் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி