உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் அருமைக்கண்ணு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜகுமாரி, வார்டு உறுப்பினர் கமலதாரணி முன்னிலை வகித்தனர்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் சரவணன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ், தங்கதுரை, விஜயகுமார், செந்தில்குமார், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந் தது. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ