மேலும் செய்திகள்
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
08-Jan-2025
கடலுார் : கடலுாரில் அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் சாவடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளி வளாகத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு நிலவியது.இதற்கிடையே பாம்பு, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு குழிக்குள் பதுங்கியது. இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் 4 அடி நீள நாகப் பாம்பை லாவகமாக பிடித்துச் சென்றார்.
08-Jan-2025