பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
புவனகிரி : புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடப்பாண்டிற்கான முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். இவர், 'அண்ணா தலைமைத்துவ' விருது பெற்றதற்காக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், அவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பள்ளி மேலாண்மை குழுவின் ஆசிரியர் பிரதிநிதி புவனேஸ்வரி வரவேற்றார். கவுன்சிலர் சண்முகம், பள்ளி மேலாண்மை தலைவி ஷர்மிளா பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்கினர்.