மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
21-Jan-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எருமனுாரை சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் ஹரிஷ், 14. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை.உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் பள்ளிக்கு செல்லாமல் ஹரிஷ் மாயமானது தெரிய வந்தது. அவரது தாய் மாமன் சுரேஷ், 30, புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து மாணவரை தேடி வருகிறார்.மேலும், மாணவரை பற்றிய தகவல் தெரிந்தால், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் 96007 83600, 96009 07385 என்ற மொபைல் எண்களில் தெரிவிக்கலாம்.
21-Jan-2025