பள்ளி மாணவர் மாயம்
குறிஞ்சிப்பாடி: மாயமான பள்ளி மாணவரை போலீசார் தேடிவருகின்றனர். குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன்பேட்டையை சேர்ந்தவர் சிவக்கண்டன் மகன் மதன்ராஜ்,16; குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 8ம் தேதி காலை, வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவகண்டன் கொடுத்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, மதன்ராஜை தேடிவருகின்றனர்.