உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி மாணவர் மாயம்

 பள்ளி மாணவர் மாயம்

நடுவீரப்பட்டு: மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்தார். கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த கீழ்மாம்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் அகிலன். இவரது மகன் ஆல்பர்ட் பிரபாகரன்,16; இவர் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி ஆல்பர்ட் பிரபாகரன், தேர்வு முடிந்து வந்ததும் பள்ளி வளாகத்தில் தனது தாய் பானுபிரியாவிடம் கோபித்துக்கொண்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் பானுபிரியா அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை