உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி இசைமொழி. இவர்களது மூத்த மகள் வைஷ்ணவ்ஸ்ரீ, 12; இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கெடிலம் ஆற்றங்கரையொட்டி உதயகுமாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் கெடில ஆற்றங்கரையொட்டிஉள்ள நிலத்தில் வெள்ள நீர் வடிவதை நேற்று குடும்பத்துடன் வந்து பார்த்தனர். பின் கெடிலம் ஆற்றில் கரையில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வைஷ்ணவ்ஸ்ரீ, 12; ஆற்றில் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டார்.உடனே அக்கம், பக்கத்தினர் உடனடியாக வைஷ்னவ்ஸ்ரீயை தேடினர். நீண்ட தேடுதலுக்கு பின் இறந்த நிலையில் வைஷ்ணவ்ஸ்ரீ உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ