உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவிகள் மாநில கைப்பந்து போட்டிக்கு தகுதி

பள்ளி மாணவிகள் மாநில கைப்பந்து போட்டிக்கு தகுதி

கடலுார்: கடலுார் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். பள்ளிக்கல்வித்துறை வி ளையாட்டுப் போட்டி கள் மாணவர்களின் திற னை மேம்படுத்துவதற்காக வட்டாரம், மாவட்டம், மண்டலம், மாநிலம் மற்றும் தேசிய அள வில் நடத்தப்படுகின்றன. கடலுார் மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டிகளில் புனித அன்னாள் பள்ளி மாணவிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இம்மாணவிகள் அனை வரும் மெட்ரோ நண்பர்கள் வாலிபால் கிளப் மூலம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவி களை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ