மேலும் செய்திகள்
ஹயகிரிவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
20-Oct-2024
கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் ஸ்பெக்ட்ரா 24 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் நடந்த கண்காட்சியில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பல்வேறு துறை சார்ந்த மாதிரிகளை இடம்பெறச்செய்திருந்தனர்.இரைப்பை குடல்அழற்சி ஆலோசகர் டாக்டர் வினோத், கதிரியக்க நிபுணர் டாக்டர் பத்மினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்தனர்.பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளியின் தலைவர் சிவகுமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவகுமார் முன்னிலை வகித்து மாணவ, மாணவிகளின் படைப்புகளை கண்டுகளித்து பாராட்டினர்.பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
20-Oct-2024