உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் அறிவியல் திருவிழா

நெய்வேலியில் அறிவியல் திருவிழா

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் திருவிழா நெய்வேலியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு துளிர்திறனறிதல் தேர்வு தமிழகம் முழுதும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஒரு லட்சம் மாணவர்கள் திறனறிதல் தேர்வில் பங்கேற்றனர். அதன் ஒரு பகுதியாக கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துளிர் அறிவியல் திருவிழா நெய்வேலி, வட்டம் 9ல்உள்ள என்.எல்.சி., நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. என்.எல்.சி., நகர நிர்வாகத்துறை பொதுமேலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன், மாவட்ட செயலாளர்கள் தனலட்சுமி, கார்த்திகேயன், நந்த ராஜேந்திரன், கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன்,மாநிலகல்வி குழு ஒருங்கிணைப்பாளர் மாதவன், பாலகிருஷ்ணன் டாக்டர் செந்தில்,பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக என்.எல்.சி., நிலக்கரி சுரங்கத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ