| ADDED : டிச 12, 2025 06:32 AM
விருத்தாசலம்: மங்களூர் அடுத்த கொளவாய் கிராமத்தில் விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையம் சார்பில், எண்ணெய்வித்து பயிர்களில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, எண்ணெய்வித்து பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பங்கள், புதிய ரங்கள், விதைநேர்த்தி, உயிர் உரங்கள், நோய் எதிர் உயிர் கொல்லி விதைநேர்த்தி, களைநிர்வாகம், ஜிப்சம் மற்றும் மண் அனைத்தல் பயன்பாடு, வேம்பு பொருட்கள் கொண்டு பூச்சிநோய் பாதுகாப்பு, குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார். இதில், மங்களூர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.