உள்ளூர் செய்திகள்

 காணும் பொங்கல்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் சக்தி விநாயகர் கோவிலில் காணும் பொங்கலில்ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் சக்திவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கரிநாள் திருவிழாவையொட்டி காலை 5:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைநடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவர் விநாயகர், முருகர், அம்மன் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை உற்சவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. விழாவில் மணம்தவிழ்ந்தபுத்துார், ராயர்பாளையம்,பொன்னங்குப்பம், சேமக்கோட்டை,நத்தம், ஒறையூர், புதுப்பேட்டை, ஆனத்துார், கொளப்பாக்கம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை