இலவச வீட்டுமனை வழங்க கடலுாரில் இடம் தேர்வு
கடலுார் : கடலுாரில், வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக இடத்தை தேர்வு செய்ய அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.கடலுார் தொகுதியில் இலவச வீட்டுமனை கேட்டு ஏராளமான பொதுமக்கள், அய்யப்பன் எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தனர். வீடு இல்லாத ஏழை மக்களுக்கான இலவச வீட்டுமனை வழங்குவதற்கு தகுதியான இடத்தினை தேர்வு செய்ய கங்கணாகுப்பம் கும்தாமேடு பகுதியில் நேற்று அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் தாசில்தார் பலராமன், ஆர்.ஐ., பானுமதி, ஊராட்சிதலைவர் மாறன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயாசம்பத், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சுதாகர், துரை, ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.