கருத்தரங்கம்
புவனகிரி: புவனகிரி திருக்குறள் இயக்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது.புவனகிரி தனியார் மண்டபத்தில் நடந்த முகாமில், திருக்குறள் இயக்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிறுவனத் தலைவர் ஜெயராமன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தில்லை தமிழ்ச்சங்க பொருளாளர் பரந்தாமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 24 வது அதிகாரம் 'புகழ்' என்ற தலைப்பில் பேசினார்.