மேலும் செய்திகள்
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு
19-Sep-2024
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைபொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெற்றிவேல் தலைமை தாங்கினார். காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கலந்து கொண்டு கஞ்சா, மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.மேலும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தினர். ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர் சுனிதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
19-Sep-2024