மேலும் செய்திகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு
02-Apr-2025
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் அனைத்துத்துறை மாணவர்களுக்கான ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் அறக்கட்டளை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தலைவர் லதா பார்த்திபன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் 33க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று 260 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பூங்கொடி, கயல்விழி, விஜயகுமார் பெருமாள், பாலாஜி, ஜான் பிரதீப் எபினேசர், இளம்பருதி, பெரிய அழகர், கார்த்திகா, சரவணன் நடுவர்களாக செயல்பட்டனர். கருத்தரங்கின் முடிவில் சிறந்த கட்டுரைகளுக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் துணை பேராசிரியர்கள் விஜயசாரதி, ஜெயபாண்டியன் செய்திருந்தனர்.
02-Apr-2025