உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம், யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பில் உலக அமைதிக்கு வித்திட்ட தமிழ் அறிஞர்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்திற்கு கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் விஜயகுமார், கருத்தரங்க மலரினை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார். கல்லுாரி முதல்வர் நிர்மலா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கீதா வரவேற்றார். கருத்தரங்கில் முன்னாள் துணைவேந்தர் சீனிவாசன், உலக அமைதிக்கு வேதாத்திரி மகரிஷியின் கோட்பாடுகள் என்ற தலைப்பிலும், பெரியார் அரசு கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் அருணாசலம், திருக்குறளில் மூவகை மூடங்களும், நால்வகை தானங்களும் என்ற தலைப்பிலும் பேசினர். புதுவை இந்திராகாந்தி க லை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் விசாலாட்சி, பாரதியாரின் மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற தலைப்பிலும், வடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் தினேஷ், ஒருமைப்பாடு கண்ட வள்ளலார் என்ற தலைப்புகளிலும் பேசினர். நிறைவு விழாவில், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பங்கேற்று மாணவர்களுக்கு பங்களிப்பு சான்றிதழ் வழங்கினார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் வெண்ணிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ