மேலும் செய்திகள்
தேசிய கருத்தரங்கம்
16-Mar-2025
கடலுார்: கடலுாரில், தேசிய அளவிலான மனித உரிமைகள் மற்றும் பெண்களுக்கு நேரிடும் அத்து மீறல்கள் குறித்து கல்லுாரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நடந்தது.கடலுார் மாவட்ட காவல் துறை சார்பில், செயினட் ஜோசப் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் கல்லுாரி செயலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் அருமைசெல்வம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட நீதிபதி அன்வர் சதாத், ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, எஸ்.ஐ., ஹென்ரி, அரசு வக்கீல் ஜெயபாரதி, வக்கீல்கள் திருமார்பன், பேராசிரியர் ராஜேந்திரன் கருத்துரை வழங்கினர்.கருத்தரங்கில், பெண்கள் அனுபவிக்கும் பல்வேறு பிரச்னைகள், பாலியல் வன்கொடுமைகள். இதனால் ஏற்படும் மன அழுத்தம், சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வழங்க வேண்டிய வேலைவாய்ப்பு, கல்வி, மக்கள் பிரிநிதித்துவம், ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் கட்டுரை சமர்ப்பித்தனர்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், கல்லுாரி துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சேவியர் பேராசிரியர்கள் சந்தனராஜ், ஜெயராஜ், சுடர்ஒளி, நுார்ஜகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
16-Mar-2025