உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு நிர்வாக குழு கூட்டம் 

மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு நிர்வாக குழு கூட்டம் 

கடலுார்; கடலுாரில் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி வரவேற்றார். கூட்டத்தில் சங்க வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகி கள் ராதாகிருஷ்ணன், பக்கிரி, விவேகானந்தன், ராமலிங்கம், ராமகிருஷ்ணன், பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், தமிழ்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பென்ஷனர் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது. தேர்தல் வாக்குறுதிப்படி, முதல்வர் ஸ்டாலின் 70 வயது பூர்த்தியான பென்ஷனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் தர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநகர தலைவர் பக்கிரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை