உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு சீர்வரிசை

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு சீர்வரிசை

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்து மதத்தை சேர்ந்த 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று 8 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. கோவில் செயல் அலுவலர் மாலா வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், மூத்த தம்பதிகளுக்கு வேட்டி, சட்டை, புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி ஆசி பெற்றார். மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட ஊழியர்கள் உடனிருந்தனர். முன்னதாக, விருத்தகிரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, தம்பதிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை