உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்

கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் லாரி இல்லாததால் தனியார் மூலமாக மக்கள் தங்களது வீட்டின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்து வருகின்றனர்.இதற்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சியில் பயன்படாமல் இருந்த குப்பை அகற்றும் லாரியை டேங்கர் லாரியாக மாற்றி கழிவுநீர் அகற்றும் வாகனமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. துாய்மை இந்தியா திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் பழைய லாரி கழிவுநீர் அகற்றும் லாரியாக புதுப்பிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களாகியும் இந்த லாரி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே, லாரியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி