மாணவிக்கு பாலியல் தொல்லை ஆய்வக உதவியாளர் சஸ்பெண்ட்
கிள்ளை : சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆய்வக உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதே கல்லுாரி வேதியியல் துறை ஆய்வக உதவியாளர் சிதம்பரநாதன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து, சிதம்பரநாதனை, 34; கைது செய்தனர். இந்நிலையில், சென்னை கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, இது தொடர்பாக விசாரணை செய்து, சிதம்பரநாதனை, 'சஸ்பெண்ட்' செய்தார்.