மேலும் செய்திகள்
ரேஷன் கடையை திறக்கபொதுமக்கள் வேண்டுகோள்
21-Feb-2025
மக்களுக்காக போராடினால் கைது தான் திமுக முடிவா?
18-Mar-2025
பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் மூலம் இறையூர், கூடலுார், நெய்வாசல், பெ.பொன்னேரி, கொத்தட்டை, கொடிக்களம், திருவட்டத்துறை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர்.நாளடைவில் பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி, சுகாதார நிலையம் பூட்டப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம், தொளார் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதால் கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.கடந்தாண்டு 15வது நிதிக்குழு மானிய சுகாதார திட்டத்தில் ரூ. 35 லட்சம் செலவில் புதிதாக சுகாதார நிலையம் கட்டி, மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக இருப்பதோடு, மக்கள் வரிப்பணத்தில் கட்டிய கட்டடமும் பாழாகி வருகிறது.
21-Feb-2025
18-Mar-2025