உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ஷட்டர் பழுது; கடலில் கலந்து வீணாகும் ம ழை நீர்

கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ஷட்டர் பழுது; கடலில் கலந்து வீணாகும் ம ழை நீர்

கடலுார் அடுத்த வானமாதேவி கெடிலம் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலமாக அணைக்கட்டு கட்டப்பட்டது. கடந்த காலங்களில் இந்த அணைக்கட்டில் தேங்கிய மழைநீரால் அருகில் உள்ள கிராமங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெற்றன. அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்க கட்டப்பட்ட ஷட்டர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதனை அதிகாரிகள் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் ஷட்டர் இல்லாததால் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் மழைநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. அணைக்கட்டு கட்டப்பட்டு 200 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஒரு சிறிய அளவுக்கூட விரிசலோ அல்லது உடைப்போ இல்லாமல் உள்ளது. குறிப்பாக, கெடிலம் ஆற்றில் பல ஆண்டுகளாக பெய்த தொடர் மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்த போதும் அணைக்கட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. தற்போது கோடி கணக்கில் செலவு செய்து கட்டப்படும் அணைக்கட்டுகள் இருந்த இடமே தெரியாமல் போகிறது. புதிய அணைக்கட்டுகள் தரைமட்டத்தின் அளவிற்கே கட்டப்படுவதால் தண்ணீர் தேங்குவதே இல்லை. இதுபோன்ற நிலையில், பழமையான வானமாதேவி அணைக்கட்டில் சில லட்சங்கள் செலவு செய்து ஷட்டரி செய்தால் நீர்மட்டம் உயரும். விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக இருக்கும். இனியாவது ஷட்டரை சரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை