உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிங்காரவேலர் பிறந்த நாள்

சிங்காரவேலர் பிறந்த நாள்

கடலுார்: சிங்கார வேலர் பிறந்த நாளை முன்னிட்டு, கடலுார் மா.கம்யூ., அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்தனர்.மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில், மாவட்ட செயலாளர் மாதவன், சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பழனிவேல், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநகர குழு உறுப்பினர் ஸ்டாலின், மணிவண்ணன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மீனவர் பேரவை

மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கி, மாலை அணிவித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுப்புராயன், பொருளாளர் மாலை மணி, இளைஞர் பேரவை தலைவர் வீரமுத்து, ஆலோசகர் முத்து, மாநகர பொது நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம், முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ