உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்துமாரியம்மன் கோவிலில் செடல்

முத்துமாரியம்மன் கோவிலில் செடல்

நடுவீரப்பட்டு: முத்துநாராயணபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. பண்ருட்டி அடுத்த முத்துநாராயணபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மதியம் சாலை வார்த்தல் நடந்தது. இரவு விநாயகர், முருகர், முத்துமாரியம்மன், அய்யனார் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று செடல் திருவிழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் செடல் திருவிழா நடந்தது. பக்தர்கள் முகத்தில் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி கிரேன் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை