உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிவகாமி அம்மன் கோவில் திருக்கல்யாணம்

 சிவகாமி அம்மன் கோவில் திருக்கல்யாணம்

சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ள சிவகங்கை குளம் மேற்கு கரையில் திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஐப்பசி பூர உற்சவம் கடந்த, 5ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மாலை சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகர்வாக, நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் கீழ வீதியில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடந்து திருத்தேர் உற்சவம் புறப்பட்டு நான்கு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சிவகாமசுந்தரி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை தபசு மற்றும் இரவு சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி